Sunday, December 30, 2007

NEW YEAR GREETING

DEAR MUSLIMS,IT IS NOT ALLOWED IN ISLAM TO CELEBRATE OR CONVEY GREETINGS FOR NEW YEAR.RASULILLAH(PBUH) TOLD ' WHOEVER IMITATES OTHER PEOPLE IS ONE OF THEM' RECORDED IN ABOO DAWOOD,AND AUTHENTICATED BY SHEIK AL-ALBAANI.

1 comment:

பஸ்லுல் இலாஹி said...

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும். ஆங்கிலேய கிறிஸ்துவர்களால் உருவாக்கப்பட்ட புத்தாண்டுக்கு வாழ்த்துக் கூறக் கூடாது என்கிறீர்கள். அப்படியானால் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆண்டை கணக்கிட பயன்படுத்துகிறீர்;களே அது சரியா? நீங்கள் ஆதாரமாகக் காட்டியுள்ள ஹதீஸ் படி இது பிற மத கலாச்சாரம் இல்லையா?

மாதம் என்பது 29 அல்லது 30 நாட்கள் என்றுதானே இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். இதற்கு முரணான 28,31 என்றுள்ள மாதங்களை பயன்படுத்துகிறீர்களே. இது இறைத் தூதர் கூற்றுக்கு நேர் எதிரான பிற மத கலாச்சாரம் இல்லையா? தூதர் வாழ்ந்த பருவ கால அடிப்படையில் பெயர் வைக்கப்பட்ட மாதங்களை நீங்கள் பயன்படுத்துவதில்லை.

மனித பிரமுகர்கள் பெயர்களால் உருவாக்கப்பட்ட மாதங்களில் பிப்ரவரிக்கு 28. மற்றவர்கள் பெயரால் உருவாக்கப்பட்டவற்றில் ஒன்றுக்கு 30 அடுத்ததுக்கு 31 என உருவாக்கி ஆகஸ்டு என்பவன் கோபித்ததால் அவன் பெயரால் உள்ள மாதத்துக்கும் 31 என ஆக்கி உள்ளதை அல்லவா நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்.

நாட்களையும் மாதங்களையும் கணக்கிட இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் சந்திரனைத்தானே பயன்படுத்தக் கூறி உள்ளார்கள். சூரியனை அடிப்படையாகக் கொண்ட கி.பி.யைத்தானே நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். இது இறைத் தூதர் கூற்றுக்கு நேர் எதிரான பிற மத கலாச்சாரம் இல்லையா?

ஜாஹிலியா காலத்து மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ஹயாக்கல்லாஹ் (அல்லாஹ் நீண்ட ஆயுளைத் தரட்டும்) என்ற வாழ்த்து முறையை முகமனாக வைத்து இருந்தார்கள். இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வாழ்த்து முறையை முகமனாக கற்றுத் தந்தார்கள். இந்த முகமனுடன் ஹயாக்கல்லாஹ் என்றும் கூறக் கூடியவர்களாக ஸஹாபாக்கள் இருந்துள்ளார்கள். இதை இறைத் தூதர் கண்டிக்கவில்லை. இந்த வழக்கம் இன்றும் அரபிகளிடம் உள்ளது.

புதிய வீடு, ஆலயம், கட்டிடங்கள் திறத்தல், நிறுவனம் ஆரம்பித்தல் மற்றும் மாநாடு போன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு வாழ்த்துக் கூறும் முறையை கொண்டு வந்தது கிறிஸ்துவ சமுதாயம்தானே. இதை செயல்படுத்தும் போது அவை பிற மத கலாச்சாரமாகத் தெரியவில்லையா?

ஒரு சமுதாயத்தவர் உருவாக்கிய ஆண்டை கணக்கிட பயன்படுத்தும்போது குறுக்கிடாத ஹதீஸ் வாழ்துக் கூறுவதில் எப்படி குறுக்கிடும். குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் அடிப்படையில் பதில் தரவும்.